அபு அலா –
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான விடயங்களில் அரசியல் தலையீடுகள் ஒருபோதும் இருக்கக்கூடாது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், பதில் முதலமைச்சருமான ஏ.எல்.முகம்மட் நசீர் உரையாற்றினார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு (26) நேற்று சபையின் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், பதில் முதலமைச்சருமான ஏ.எல். முகம்மட் நசீர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபெத்தியினால் அவசர தனிநபர் பிரரேணை ஒன்றை சமர்ப்பித்தார். இதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், பதில் முதலமைச்சருமான ஏ.எல்.முகம்மட் நசீர் பதிலளிக்கையில்,
அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது, கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியனம் செய்யப்படுகின்ற ஆசிரியர்கள் குறிப்பாக நியமனத் திகதியிலிருந்து ஐந்து வருடங்கள் கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் நியமிக்கப்படுகின்றார்கள்.
ஆனால் இவ்வாறான நிபந்தனைகள் பின்பற்றப்படாமல் புதிதாக நியமனம் செய்யப்படுகின்ற ஆசிரியர்கள் குறிப்பிட்ட சில காலம் மட்டும் கடமையாற்றிவிட்டு அரசியல் தலையீடுகள் காரணமாக அவர்களின் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் கடந்த ஆட்சிக்காலத்தின் போதே அதிகரித்துக் காணப்பட்டது. 2011, 2012, 2013 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாண அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த ஆட்சியாளர்களின் காலத்தின்போது முழுமையான அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்தி குறிப்பிட்ட ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம்பெற்றுச் சென்றுள்ளனர்.
இதனால் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சமநிலை பேணப்படாமல் சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் வெற்றிடம் காணப்பட்டு வருகின்றது. எனவே ஆசிரியர்கள் விடயத்தில் எந்த அரசியல் தலையீடுகளும் இடம்பெறாமல் இருக்கவேண்டும். அத்தோடு தற்காலிமாக அரசியல் தலையீட்டால் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கும் நியமிக்கப்படவேண்டும் என்று கல்வி அமைச்சரின் கனத்துக்கு கொண்டுவந்தார்.