திஸ்ஸ விதாரண முறைமையே மலையக மக்களுக்கும் நன்மை வகிக்கும் :பீ.பி.தேவராஜ்

SAMSUNG CSC

 

அஷ்ரப் ஏ சமத்

இலங்கைத் தொழிலாளா் காங்கிரசினால் மலையக மக்கள் சாா்பாக முன்வைக்கப்பட
உள்ள அரசியலமைப்பு யேசனைகள“ பற்றி நேற்று (26)ஆம் திகதி வெள்ளவத்தை
குலோபல் ஹோட்டலில் கூடி ஆராய்ந்தனா்  .

இதில் மலைய மக்களைப் பிரநிதித்துவப் படுத்தி சட்டத்தரணிகள் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பிணா்கள் விரிவுரையாலா்கள் தத்தமது யோசனைகளை
முன்வைத்தனா்.  பாராளுமன்ற உறுப்பிணா் முத்து சிவலிங்கம், ஆறுமுகம்
தொண்டமான், முன்னாள் பிரதியமைச்சா் பீ.பீ. தேவராஜ் , சதாசிவம்,
ஆர்.சிவராம், திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தலைவி யஜோதரா
ஆகியோா்களும் இங்கு உரையாற்றினாா்கள்.

SAMSUNG CSC

. தமிழா் சிங்களவா் முஸ்லீம்கள் போன்று  இங்கு அரசியலமைப்பில் மலையக
மக்கள் அல்லது மலையகத் தமிழா் என்ற வசனமும் அரசியலமைப்பில்
உள்ளடக்கப்படல் வேண்டும்

வடகிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம்களுக்கு அம்மக்கள் பெரும்பாண்மையக
வாழக்கூடிய தோ்தல் தொகுதிகள் உள்ளது. ஆனால் மலையக தமிழ் மக்களுக்காக இந்த
நாட்டில் ஒரு தோ்தல் தொகுதிகளும் இல்லை. முதலில் நாம் நமது இருப்பை
பெற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கான அலகு,  120 குடும்பங்கள்
கொண்ட  கிராம சேவகா் பிரிவு பெரும்பான்மையினருக்கு உள்ளது. ஆனால் மலையக
மக்கள் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவையாகத்தான்  உள்ளது.
ஆகக் குறைந்தது 500 மலையக குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகா் பிரிவாவது
உருவாக்கப்படல் வேண்டும்.  தென்ஆபிரிக்க முறையும். திஸ்ஸ விதாரண முறைமையே
மலையக மக்களுக்கும் நன்மை வகிக்கும் அதனை அமுல்படுத்த வேண்டும்.என
பீ.பி.தேவராஜ் தெரிவித்தாா்.

SAMSUNG CSC

மலைய மக்கள் இலங்கையில் 190 வருடங்களாக வாழ்கின்றனா். இ ன்னும்
அவா்களுக்கான அடிப்படை உரிமை இல்லை .எமது சனத்தொகை5.5 வீதத்திற்கு
பாராளுமன்றத்தில் 15 உறுப்பிணா்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன
மலைய மக்களைக் கொண்டு பிரதேச சபைகள் உருவாக்கப்படல் வேண்டும்.
நுவரெலியாவில் 50 -50 வீதம் வாழ்ந்தாலும் கூட அங்கு மலையக மக்களுக்கான
தொகுதி நிர்ணயம் ்இல்லை. எனக் கூறப்பட்டது. ஊவா, மத்திய மாகான சபைகளில்
தமிழ் தனியான மாகாண அமைச்சா் போன்று மேல், சப்ரகமுவ மாகாணசபைகளிலும் 2
மலையக தமிழ் அமைச்சா்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

தற்போது இந்த நல்லாட்சியில் கூட  அரசியலமைப்பு சபையில்  9 பேர்
நியமிக்கப்பட்டிருக்கின்றனா். ஆனால் 14  இலட்சம் மலையக மக்களை
பிரநிதித்துவப்படுத்தி ஒரு உறுப்பிணா் அச் சபையில் நியமிக்கப்படவில்லை என
குற்றஞ் சா ட்டப்பட்டது.

மேலும் அடுத்த 3 நாட்களுக்குள் மீள கூடி தத்தமது வரைபுகளை ஆர்.சிவராம்
அவா்களுக்கு அனுப்புபடியும். இறுதித் தீா்வை எமது கட்சி ஊடாக
சமா்ப்பிப்பதாக முடிபு எடுக்கப்பட்டது.
ஜ.தே.கட்சியில் இம்முறை பாராளுமன்றத் தோ்தலில் போட்டியிட்டு  7
பாராளுமன்ற  உறுப்பிணா்களைப் பெற்றும் ஜ.தே.கட்சியில்  ஒரு தேசிய
பட்டியல் பாராளுமன்ற உறுப்பிணா்களைக் கூட  பெற்றுக் கொள்ளமுடியாமல்
போகிவிட்டது. ஆனால் முஸ்லீம் கட்சிகள் 3 தேசிய பட்டியல் உறுப்பிணா்களை
பெற்றுள்ளாா்கள். என   சதாசிவம் தெரிவித்தாா்.