YLS. ஹமீட்டின் பூச்சாண்டி வித்தைக்கு நேற்று நீதிமன்றம் வெளிச்சத்தினை காட்டியுள்ளது !

   அபூ சுஹா 

 

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் யாப்பு என்பது கட்சியின் செயலாளரின் முழுமையான அதிகார எல்லைக்குற்பட்டது என்றும் அதில் இருந்து தன்னை அகற்ற முடியாது என்று வீராப்பு பேசிவந்த கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டின் முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பு  மிகவும் முக்கியமானதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இந்த கட்சியின் ஆரம்பத்தின் பின்னர் ஒரு முறை மட்டுமே கட்சியின் பேராளர் மாநாடு கூட்டப்பட்டு அதில் தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கான நியமனங்களுக்கான அங்கீகாரத்தை பேராளர்கள் வழங்கியதன் பொருட்டு தான் வை.எல்.எஸ்.ஹமீட்டும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவியில் அமர்ந்தது மட்டுமல்லாமல்,ஏனைய வசதிகளையும் அனுபவித்து வந்துள்ளார்.

rizad bathiy

கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் தமக்கு தேசியப்பட்டியல் தரப்படவில்லை என்ற காரணத்தினை முன்வைத்து அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான அணியுடன் சேர்ந்து பல சதிகளை அவர் செய்த போது இறைவன் உதவியால் அது தோற்கடிக்கப்பட்டது.

இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீனினால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னாள் வன்னி எம்.பி ஹூனைஸ் பாருக்,மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் ஆகியோரின் செய்றபாடுகளின் வீரியத்தை தற்போது காணமுடியவில்லை.அதற்கு காரணம் அவர்களது செல்வாக்குகள் இல்லை என்பதை எம்மால் அறிந்து கொள்ளமுடிகின்றது.

இந்த பண்புகளை கொண்டவர்களின் வரிசையில் தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டும் இணைந்துள்ளார் என்பது புலனாகின்றது.

இந்த நிலையில் தீர்மாணத்தினை எடுக்கும் அதிகாரத்தை சுப்ரீம் கவுன்சில் கொண்டிருந்த போதும்,கட்சியின் யாப்பில் தனக்கு மட்டுமே தீர்மாணிக்கும் சக்தியுண்டு என்று காட்டிவந்த பூச்சாண்டிவித்தைக்கு நேற்று நீதிமன்றம் வெளிச்சத்தினை காட்டியுள்ளது.

இன்று இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் அதனை தீர்ப்பது எப்படி  என்று கட்சியின் தலைமைத்துவமும்,ஏனையவர்களும் முனைந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்ற போது,எவன் வீடு பத்தி எரிந்தால் என்ன நான் பிடில் வாசிப்பதை நிறுத்தப் போவில்லை என்று குதர்க்கத்தனத்தில் இருந்து வந்த வை.எல்.எஸ்.ஹமீட்,இறுதியில் இந்த கட்சியினை மன்றம் கொண்டு சென்று அதன் மூலம் கட்சியின் போராளிகளுக்கு அநியாயத்தை செய்தது மட்டுமல்லாமல்,மீண்டும் இந்த கட்சியின் செயலாளராக வருவதற்கு எடுத்த முயற்சியும் தோல்வி கண்டுவிட்டது என்றால் அது மிகையாகாது.

rizad

கட்சியின் யாப்பின் படி சுப்ரீம் குழுவின் பெரும்பான்மை பிரதி நிதிகள் முன் வைக்கும் ஆலோசனைகள் அங்கீகரிக்கப்படுகின்ற போது இது நடை முறகை்கு கொண்டுவரும் அதிகாரம் இயல்பாகவே வருகின்றது என்பதை இந்த கட்சியின் யாப்பில் உள்ளதை இன்றைய நீதிமன்ற பதிலில் இருந்து காணமுடிகனின்றது.

சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுநது சட்டத்தினை கற்றுக்கொடுப்போம் என்று கூறியவர்கள் அந்த சட்டம் எந்தளவுக்கு பொருமை காத்துநிற்கின்றது என்பதை காணமுடிந்தது.இந்த நிலையில தொடர்ந்து கட்சியின் எதிர்காலத்திற்கு சவால்விடுபவர்கள் இன்றையமன்றின் தீர்ப்பின் பக்கத்தில் இருந்து நல்ல பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

எது எவ்வாறாக இருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக பேராளர் மாநட்டில் பேராளர்களால் அளிக்கப்பட்ட அங்கீகாரத்திற்கு நீதிமன்றமும் தனது நியாயத்தை வழங்கியுள்ளது என்பது யதார்த்தமாகும்