தடுமாறிவரும் சீன பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, மற்றும் ஈரான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
ஜி ஜின்பிங்கின் இந்த பயணத்தின் முதல் நாளில் சவுதி அரசர் சல்மான் பின் அப்துல் அஜிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் இரு நாடுகள் சார்பாகவும் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் ஏமன் நாட்டில் ஒற்றுமை, சுதந்திரம், இறையாண்மைக்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தின.
இந்த சுற்றுப்பயணத்தில் எகிப்து அதிபர் அப்டெல் பட்டா அல்-சிசி மற்றும் ஈரானிய அதிபர் ஹாசன் ருஹானி ஆகியோரையும் சீனா அதிபர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.