(வீடியோ) நல்லாட்சி என்பதற்கு பதிலாக நழுவல் ஆட்சியே இடம்பெறுகின்றது : ஹுனைஸ் பாரூக் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

VIDEO

கடந்த மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கத்தின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிகையின்மையினை அடிப்படையாக வைத்து முதன்லாக இந்த நாட்டில் அரசாங்கம் மாற்றப்பட்டு நல்லாட்சியானது ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முதன் முதலில் முஸ்லிம்பாரளுமன்ற பிரதிநிதிகளில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணிக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் இந்த நாட்டில் தற்பொழுது நல்லாட்சி என்ற பெயரில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற ஆட்சியானது எனது பார்வையில் நழுவல் ஆட்சியாகவே தென்படுக்கின்றது என முன்னாள் மன்னர் மாவட்டத்து அகில இலங்கை மக்கள் காங்கிரசினை பிரதிநித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் இணைய நாளிதல்களுக்காக வழங்கிய நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.

hunais farook

 

நாட்டிலே இடம் பெறுகின்ற முக்கியமன பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கின்ற வேலையில் பிரதம மந்திரியினை கேட்டால் ஜனாதிபதியினை கேட்குமாறு கூறுக்கின்றார். ஜனாதிபதியினை கேட்டால் சந்திரிக்கா அம்மையாரினை கேட்குமாறு கூறுக்கின்றார். அம்மையாரிடம் கேடால் அவர் இன்னொருவரை கூறுக்கின்றார். இவ்வாறு நல்லாட்சி எனும் பந்தானது உதைப்பந்தாட்டத்தில் பந்து எவ்வாறு கால்களுக்கிடையே மாற்றப்படுமோ அவ்வாறே மாற்றப்பட்டுக்கொண்டிருபதனை அவதாணிக்க கூடியதாக இருக்கின்றதே தவிர நல்லாட்சிக்கான சமிக்கைகளை காணக்கூடியதாக இல்லை. மக்கள் எதிர்பார்த்த பொருட்களின் விலை குறைப்பிற்கு மாற்றமாக விலை ஏற்றம் அதிகரித்து செல்கின்றது. அதே போன்று நல்லாட்சிக்கு யார் யார் உதவினார்களோ அவர்கள் இன்று மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டு மூலையில் வாழ்ந்து கொடிருக்கின்றார்கள். நல்லாட்சிக்கு யார் எதிராக அன்று செயற்பட்டு நல்லாட்சியானது இந்த நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்னும் கருத்துமாக செயற்பட்டுவந்தார்களோ அவர்கள் அனைவரும் இன்று நல்லாட்சிக்குள் நுழைந்து அமைச்சு பொறுப்புக்களைப் பெற்று சுகபோக வாழ்க்கையினை அனுபவித்து வருக்கின்றனர். ஆகவே தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற ஆட்சியானது எவ்வாறு நல்லாட்சியாக மாற்றமடையும் என்பதே எனது பிரதான கேள்வியாக இருக்கின்றது.

மேலும் நேர்காணலின் பொழுது தனது கருத்தினை தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் அர் ஹுனைஸ் பாரூக், பலவழிகளும் அரசியல் அதிகாரத்துடனும் சர்வதிகாரம் என்றரீதியில் ஆட்சியினை வைத்திருந்த  கடந்த மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தினை எதிர்த்து இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முதன் முதலாக நான் நல்லாட்சி கூட்டணிக்கு ஆதரவளித்தமை ஒரு புறமிருக்க ஆதரவளித்தமைக்காக என்னுடைய வாகனமும் சாரதியும் இரவோடிராவக தாக்கப்பட்டும் என்னை கொலை செய்வதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படிருந்த நேரத்தில் எனக்கு ஞாபகம் இருக்கின்றது தற்போதைய ஜனாதிபதியின் வீட்டிலிருந்து நானும் அமைச்சர் ராஜிதசேனரத்னவும் ஜானதிபதியும் ஒரே காரில் ஏறி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியலையமான சிறீ கொத்தாவிற்கு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன எங்களிடத்தில் கூறினார் மஹிந்தவை நம்ப முடியாது .நாங்கள் போகின்ற வழியில் எங்களுக்கு ஏதும் திட்டமிடப்பட்டு நடந்தாலும் நடக்கலாம். ஆகவே சாட்சிக்கு எவறாவது உயிருடன் இருக்க வேண்டும் எனவே நாங்கள் தனித்தனி வாகனங்களில் பயணிப்போம் எனக்கூறியவுடன் அதன்பால் நாங்கள் அமைச்சர் ராஜித சேனரத்னவை வாகனத்தின் முன் ஆசனத்திலும் பின் ஆசனத்தில் தற்போதைய ஜனாதியும் பயணித்த அதே நேரத்தில் பின் னால் வந்த வாகனத்தில் நானும் சிறீகொத்தாவிற்கு பயணித்தேன்.

இவ்வாறு எங்களது உயிர்களை கூட துச்சமென மதித்து நாங்கள் இந்த நாட்டில் மஹிந்த ராஜபக்ஸ்சவின் ஆட்சியினை கவிழ்த்து நல்லாட்சியினை உறுவாக்குவதற்கு சென்ற சமயத்திலே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்னை அழைத்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாரும் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்காக வாய்ப்பினை தருவதாகவும், அதன் பின் வன்னிமாவட்ட மக்களின் அபிவிருத்திக்காக முக்கியமான அமைச்சினை தருவதாகவும்  வாக்களித்தற்காக மட்டுமல்லாமல் இந்த நாட்டில் உண்மையாக நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் இதயசுத்தியடன் நாங்கள் அரும்பாடுபட்டு இந்த நல்லாட்சியினை உறுவாக்கியதற்கு பிற்பாடு நாங்கள் ஓரங்கட்டப்பட்டு யார் யார் நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டார்களோ அவர்கள் இன்று உள்வாங்கப்பட்டிருப்பதனை வைத்தே நான் இந்த நல்லாட்சியினை நழுவல் ஆட்சி எனக்கூறுவதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது எனத் தெரிவித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கிடம் கேட்கப்பட்ட இன்னும் பல அரசியல் சுவாரஸ்யமான கேள்விகளுக்கான பதில்களின் காணொளியானது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.