இலங்கையில் தேர்தலுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது!

 

images

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் தேர்தலுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. 

கிளிநொச்சியில் சில குடும்பங்களை சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி வருகிறார்கள். 

தற்போது பொதுமக்கள் அச்சமற்ற சூழலில் இருக்கிறார்கள். ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றன. 

நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு சிறந்த நாடு உருவாக்கப்பட வேண்டும். 

இலங்கை சிறந்த எதிர்காலத்தை எட்டுவதற்காக பிரித்தானிய அரசாங்கம், பிரித்தானிய மக்கள் அனைவரும் எம்மால் முடியுமான எத்தகைய உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம். 

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல், பொறுப்புக்கூறல், ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்தும் பங்களிப்புக்களை வழங்குவோம்.