மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டது என உலக சுகாதாரக் கழகம் அறிவித்து சில மணி நேரங்களில் சியர்ரா லியோனில் மேலும் ஒருவர் இபோலாவால் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
நாட்டின் வடக்கே டொங்கொலில்லி மாவட்டத்தில் இறந்த அந்நபரைப் பரிசோதித்தபோது, அவருக்கு இபோலா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சியர்ரா லியோன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
வியாழனன்று இபோலா முடிவுக்கு வந்ததாக அறிவித்த நேரத்திலேயே, மேலும் சிலருக்கு இபோலா இருப்பதாக இனியும் தெரியவரலாம் என உலக சுகாதாரக் கழகம் எச்சரித்திருந்தது.
இம்முறை இரண்டு ஆண்டுகளுக்கு முன் பரவ ஆரம்பித்த இபோலா நோய், கினீ, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளில் பதினோராயிரத்துக்கும் அதிகமானோரைப் பலிகொண்டுள்ளது.