இந்தோனேசியாவில் இன்று அதிபர் மாளிகை அருகே குண்டு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.
ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை அருகே உள்ள சரினா வணிக வளாகம் மற்றும் உணவு விடுதியில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. வெளியில் காவல் நிலையம் அருகிலும் குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் ஊடுருவிய மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குண்டுவெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.