SLMC தனி அலகு என்ற அதிகாரப்பகிர்வு திட்டத்தை அரசியல் அமைப்பு சபையிடம் முன்வைக்கவுள்ளது !

hasan ali
வடக்கு கிழக்கை அடிப்படையாக முஸ்லிம்களுக்கு தனியான அலகு என்ற அதிகாரப்பகிர்வு திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் அமைப்பு சபையிடம் முன்வைக்கவுள்ளது.

காங்கிரஷின் ஸ்தாபக தலைவர் எம். எச். எம் அஸ்ரபின் கோரிக்கையாக இந்த அமைந்திருந்தது என்று காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையில் இரண்டு மாகாணங்களிலும் நிலத்தொடர்பற்ற அடிப்படையில் தனியான அலகு என்ற அடிப்படையில் தமிழர்களுடன் அதிகாரங்களை பகிர்ந்துக்கொள்ளும் யோசனையே முன்வைக்கப்படவுள்ளதாக ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தடையற்ற அதிகார பரவலாக்கம் என்ற அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கின் அதிகாரப்பகிர்வு திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ளது.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகிறது.