பாகிஸ்தான் சொன்னபடி நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா காத்திருக்கிறது !

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடியிடம் வாக்குறுதி அளித்தபடி உடனடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா காத்திருப்பதாக வெளிவுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

narendra-modi-and-nawaz-sharif1

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை இந்தியா பொறுத்துக் கொள்ள தயாராக இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பது பாகிஸ்தான் நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது.

பதான்கோட் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இதில் பாகிஸ்தானுக்கு எந்தவொரு காலக்கெடுவும் விதிக்கவில்லை. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாக்குறுதி அளித்தபடி தீவிரவாதிகளுக்கு எதிராக உடனடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காத்திருக்கிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.