ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரும் நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரான்டே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வைக்காண முயற்சித்த நோர்வேவின் வெளியுறவு அமைச்சர் ஒருவர் இறுதியாக 2005ஆம் ஆண்டு இலங்கை வந்துசென்றார்.
இந்தநிலையில் இலங்கை வரவுள்ள நோர்வேயின் வெளியுறவு அமைச்சர், தேசிய நல்லிணக்கம் தொடர்பில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலக தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சந்திக்கவுள்ளார்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின்பேரில் இலங்கை வரும் போர்ஜ், தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் மங்கள சமரவீரவுடன் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளார்.
இதனையடுத்து நாளை மாலை அவர் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் இடம்பெறும் வர்த்தக அமர்வு ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.