துபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!

 

Unknown
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் துபாய் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான துபாயில் உள்ள உலக அளவில் பெரிய கட்டிடம் ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 20-வது மாடியின் வெளிப்புறத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மேலிருந்து கீழ் வரை தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டம் போல் காட்சி அளித்தது. 

விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று துபாய் பாதுகாப்பு துறை தலைவர் மேஜர் ஜெனரல் ரஷெத் அல்-மத்ருஷி தெரிவித்தார். இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்று அவர் கூறினார். 

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 160 அடுக்குமாடி கட்டிடத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டிற்கு முன்பாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.