ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் எந்தவகையிலும் கருத்தொற்றுமை கிடையாது !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் எந்தவகையிலும் கருத்தொற்றுமை கிடையாது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற ஆடைத்தொழிற்சாலையொன்றின் திறப்பு விழாவில் இன்று மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

Mahinda-Rajapaksa_2806986b

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிக்கும் ஒரே நோக்கிலேயே ரணிலும் மைத்திரியும் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கினர். மற்றபடி அவர்கள் இருவருக்கும் எந்த விடயத்திலும் கருத்து ஒருமைப்பாடு இல்லை.

நான் எப்போதும் கூறுவதைப் போன்று ஒரே நேரத்தில் இரண்டு தலைவர்களால் நாட்டை ஆளமுடியாது.

ஒன்றில் ரணில் இந்நாட்டை ஆளவேண்டும். இல்லையேல் மைத்திரிபால நாட்டை ஆளவேண்டும். ஆனால் என்னைத் தோற்கடிப்பதில் ஒன்றுபட்டு செயற்பட்டதைப் போன்று இந்த விடயங்களில் எல்லாம் அவர்களால் ஒரு முடிவில் இணக்கத்தை எட்டமுடியாது.

சுதந்திரக் கட்சி எங்கள் அனைவருக்கும் சொந்தமான கட்சி. அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.