ஜவ்பர்கான்–மட்டக்களப்பு
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து 14871 பெண்களும்;.2015ம் ஆண்டு சுமார் 15000 பணிப்பெண்களுமாக 29871 பெண்கள் கடந்த இரு ஆண்டுகளில் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ளனர்..2016ம் ஆண்டில் அது குறைவதற்கான வாய்ப்புண்டு. 2017ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திலிலுந்து எந்தவொரு பெண்ணும் பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு செல்வதை நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு(ஒசா) நடாத்திய 500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினை வேலயில்லாப்பிரச்சினை யாகும்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் இரண்டு இலட்சம் இளைஞர் யுவதிகள் வேலையில்லாதவர்களாக இருக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 4000 மில்லியன் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இந்த வைபவத்தில் பொறியியலாளர் எம்.எம்.அப்துர்றஹ்மான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.