லாஸ் ஏஞ்சலஸ் புறநகர் பகுதியில் திடீர் புதர் தீ: 1240 ஏக்கர் நிலங்கள் நாசம் – முக்கிய நெடுஞ்சாலைகள் மூடல்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் புறநகர் பகுதியில் திடீரென ஏற்பட்ட புதர் தீ இங்குள்ள சுமார் 1240 ஏக்கர் நிலங்களை நாசப்படுத்தியதால் சில இடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
8491b6a2-4233-4454-a5f8-04baf738a1e8_S_secvpf

லாஸ் ஏஞ்சலஸ் நகரின் வடகிழக்கே உள்ள வென்ச்சுரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புல்புதர் பற்றி எரிய தொடங்கியதில் ஆரம்பித்த தீ பெருந்தீயாக மாறி பல்வேறு பகுதிகளுக்கு பரவ தொடங்கியது. அங்கு மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசிவருவதால் மளமளவென பரவும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திண்டாடி வருகின்றனர்.

தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்த இன்னும் மூன்று நாட்களாக தேவைப்படும் என கருதப்படும் நிலையில் சோமியா கடற்கரை மற்றும் பரியா கடற்கரை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருபவர்களை அங்கிருந்து வெளியுறுமாறு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த புதர்தீ சாலையோரங்களிலும் பரவி வருவதால் அமெரிக்க நெடுஞ்சாலை 101-ன் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளன.