ஜவ்பர்கான்
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு காத்தான்குடியில் சம்மேளன அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளான தாதியர் , வைத்தியர்கள் , காவலாளிகள் , இரத்த வங்கி போன்ற இன்னும் பல குறைபாடுகளை சம்மேளன உறுப்பினர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் சுட்டி காட்டி இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டு கொண்டனர் .
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் நான் கருத்தில் கொண்டுள்ளேன் . வெறுமனே சொல்லில் இல்லாது அனைத்து பிரச்சனைக்குமான தீர்வுகளையும் எனது ஆட்சிக்காலத்துக்குள் பல்வேறு நடவடிக்கை மூலமாகவும் தீர்வினை பெற்று தருவேன் என இதன் போது கூறினார்