காலையில் நீரில் தேன் கலந்து குடித்தால் இதய நோய் வருவதை தடுக்கலாம்!

 

நீருடன் தேனைக் கலந்து குடித்தால், இன்னும் ஏராளமான பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் மருத்துவ பொருள். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் இன்னும் மேம்பட்டு, நோய்களின்றி இருக்கும். 

Unknown
தேனிற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி உள்ளது. அதிலும் அந்த தேனை தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் இனிப்பு சுவைக்கு தேனை பயன்படுத்திக் கொள்ளலாம். 

அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும். 

எனவே உங்களுக்கு நல்ல பொலிவான முகம் வேண்டுமானால், நீரில் தேன் கலந்து தினமும் குடித்து வாருங்கள். குளிர் அல்லது மழைக்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் தினமும் காலையில் தேன் கலந்து குடித்து வந்தால், தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் புண்கள் குணமாக்கப்படும். மேலும் இக்கலவை சளி, இருமல், சுவாசக்கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியும் கூட. உங்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க நினைத்தால், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வாருங்கள். 

மேலும் எந்த ஒரு இனிப்பு பொருட்களிலும் சர்க்கரையைத் தவிர்த்து, தேனைக் கலந்து எடுத்து வாருங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்படுவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவும் குறையும். தற்போது இதய நோயால் தான் நிறைய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் அவற்றில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோயின் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தரும்.