சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க விரும்பவில்லை: புதின்

 

‘சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க விரும்பவில்லை. அதை யாரும் நம்ப மறுக்கிறார்கள் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் உள்ள ஒரு தனியார் டி.வி.யில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று பேசினார்.

images

அப்போது அவர் கூறியதாவது:–

உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யுனாகோவிச் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அங்குள்ள ஐரோப்பிய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவி விலகினார். இதனால் உக்ரைனில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் புகார் கூறுகின்றன.

உக்ரைன் மற்றும் சில நாடுகள் முன்னாள் சோவியத் ரஷியாவில் இருந்தன. எனவே, அவற்றை மீண்டும் ஒன்றினைத்து ‘சோவியத் ரஷியா’ உருவாக்க போவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்கம் எண்ணம் ரஷியாவுக்கு இல்லை.

ஆனால் இதை யாரும் நம்ப தயாராக இல்லை. உண்மையை கூறினால் நம்ப மறுக்கிறார்கள். ரஷியா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும். ஆனால் அதை ஒரு போதும் பயன்படுத்தாது. அணு ஆயுத நாடாகிய ரஷியா தொடர்ந்து அதை மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.