ஜவ்பர்கான்
முன்னர் இடதுசாரிகளாகவிருந்து சமத்துவம் பேசிய சிலரும் இன்று இனவாதிகளுடன் இணைந்து கொண்டு நல்லாட்சியை கவிழ்க்கமுனைகின்றனர்.இது இந்த நாட்டிற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.30 வருகால யுத்தத்தில் சகலதையும் இழந்தவர்கள் தமிழர்கள்.சிதைக்கப்பட்ட வதைக்கபட்ட ஒரு இனம் தமிழினம்.அந்த இனம் கல்வியையும் இழந்துவிடக்கூடாது.இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர் பேசினார்.
பாடசாலை அதிபரி எஸ்.மனோராஜ் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கல்வத்துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர் இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக துணிந்து பேசிய ஒருவர் வாசுதேவ நாணயக்கார அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் ஆனால் இன்று இனவாதிகளுடன இணைந்து கொண்டு நல்லாட்சிக்கெதிராக செயற்பட்டுவருகிறார் இது கவலைப்படும் விடயம் ஒருபோதும் தமிழ் முஸ்லிம் மக்களால் கொண்டுவரப்பட்ட இவ்வாட்சியை கவிழக்கமுடியாது என்றார் .