சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு விருந்துபசாரம் !

 வரவு செலவுத்திட்ட விவாதம் நிறைவடைந்தமை மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ காலம் நிறைவு பெற்றமை ஆகியவற்றை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசார நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார்.

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

இந்த நிகழ்விற்காக வருகைத் தந்த ஜனாதிபதியை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அவரது பாரியார் வரவேற்றனர். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இதன்போது கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.