ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து விடுதலை !

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

kehaliya

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் செய்தமை தொடர்பில் கட்டணம் செலுத்தாமையால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து, இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

இந்த சம்பவத்துடன் அவருக்கு தொடர்புகள் இல்லை என்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார். 

இந்த விசாரணைகளுக்காக அவர் இன்றைய தினம் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். 

இந்த நிலையிலேயே கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான விசாரணைகளில் இருந்து அவரை விடுவிப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.