டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தி பகுதிகளில் இருந்த 1200 குடிசைகளை ரெயில்வே துறையினர் இடித்து தள்ளினர். இதில் 6 மாத குழந்தை ஒன்றும் பலியானது.
குடிசைகளை இடிக்க அதிகாரிகள் வருவதை அறிந்த மக்கள், அவசர அவசரமாக வீடுகளை காலி செய்ய நேரிட்டதால் ஆறுமாத குழந்தை பலியானது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய ரெயில்வே அதிகாரிகள் அளித்த விளக்கம், முதல்வர் கெஜ்ரிவாலை திருப்திப்படுத்தாததை அடுத்து அவர் ஒருநபர் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தேவையான முன்னேச்சரிகை நடவடிகையோ, குடிசை பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பாக அவர்களின் புனர்வாழ்வு ஏற்பாடோ செய்யாமல் குடிசைகளை அகற்ற உத்தரவிட்ட அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை அனுகவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவையும் கெஜிரிவால் சந்திக்கவுள்ளார்.