ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஊழலுக்கு எதிரான பேரணி!

 

images
இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற கலாச்சாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன. 

இதன் முதற்கட்டமாக சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு நாளை (9ம் திகதி) மாலை 03.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேசிய நிகழ்வு மற்றும் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

சர்வதேச ஊழல் எதிர்ப்பு பேரணி மாலை 03.00 மணியளவில் விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமாகி சுதந்திர சதுக்கம் வரை சென்று, அங்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

அதன் பின்னர் ஊழல் அற்ற கலாச்சாரத்தினைக் கட்டியெழுப்புவது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பல வேலைத் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. 

Zero Tolerance for Corruption என இந்த வேலைத் திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, இதன்போது இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்ப்பது குறித்து மக்களுக்கு தௌிவூட்டுதல் குறித்து அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. 

மேலும் இது குறித்த வேலைத்திட்டங்கள் சில அடுத்த வருடம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.