இயற்கை சீற்றத்தை எதுவும் செய்ய முடியாது : கத்ரீனா கைப் !

katrina_kaif_bollywood_girl-1152x864

 சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

வசதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் புகுந்த பகுதிகளில் மட்டுமல்ல, மின்சாரம் இல்லை, பால் தட்டுப்பாடு, குடிநீர் கிடைக்காத சோகம் என்று சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளில் இருப்பவர்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் – நடிகைகள் மட்டுமல்ல தெலுங்கு, மலையாள நடிகர் – நடிகைகளும் அனுதாபம் தெரிவிப்பதோடு நிறுத்தாமல், பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

பாலிவுட் நட்சத்திரஙக்ளையும் சென்னை வெள்ளம் பரிதாபப்பட வைத்துள்ளது. அமிதாப்பச்சன் உள்பட பலர் தங்கள் வேதனையை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்கள் குறைந்த அளவு நிதி கொடுத்து இருப்பதை குறை கூறியுள்ளார்.

இந்தி நடிகை கத்ரீனா கைப் சென்னை வெள்ளம் குறித்து நிருபர்களிடம் கூறும்போது….

‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களை நினைத்து வருத்தப்படுகிறேன். எனது தாயும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மிக அருகில் வசிக்கிறார். இதுபற்றி அங்கிருந்து போன் வந்ததில் இருந்து கவலையாக இருக்கிறது.

இயற்கை சீற்றத்தை எதுவும் செய்ய முடியாது. அது துரதிருஷ்டவசமானது. இந்த சேதம் எதிர்பாராதது. மக்கள் தங்களால் முடிந்த அளவு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்’’ என்றார்.