ஜெம்சாத் இக்பால்
நீர் விநியோகம், சுகாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, தேசிய நீர் விநியோகத் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரித்தல், பல்வேறு துறைகளில் சக்தி வளத்தைப் பலப்படுத்துதல் மற்றும் திட்டமுகாமைத்துவம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உலக வங்கியின் உயர்மட்டத் தூதுக்குழுவினருடன் அண்மையில் அவரது அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, நுவரெலியா, பதுளை, மோனராகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஏழு மாவட்டங்களும் அபிவிருத்தி உதவி பெறுவதற்கான முன்னுரிமை மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்;.
நீர் விநியோகம், சுகாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, தேசிய நீர் விநியோகத் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரித்தல், பல்வேறு துறைகளில் சக்தி வளத்தைப் பலப்படுத்துதல், திட்டமுகாமைத்துவம் உட்பட பல்வேறு விடயங்களுக்காக 165 மில்லியன் டொலர் செலவில் நீர் விநியோகத்திட்டங்கள் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் நாட்டில் நடைமுறைக்கு இடப்படவிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம், உலக வங்கியின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.
இது சம்பந்தமான விபரங்களை சேகரித்துக் கொண்ட தெற்காசிய நாடுகளுக்கான நீர் வளமுகாமையாளர் பரமேஸ்வரன் ஐயர் கருத்து வெளியிடுகையில், உலக வங்கியின் தலைமை நிலையத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடிய பின்னர் இது பற்றி பதிலளிப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தார்.
உலக வங்கியின் உயர்மட்டத் தூதுக்குழுவின் சார்பில் செயல்திட்ட தலைமை அதிகாரி உல்ரிச் ஸ்ச்மிட், பூகோள தண்ணீர் பயன்பாடு பற்றிய தெற்காசிய முகாமையாளர் பரமேஸ்வரன் ஐயர் ஆகியோர் உட்பட அதன் உயரதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.அத்துடன், அமைச்சின் சார்பில் செயலாளர் பீ.எம்.யூ.டி.பஸ்நாயக்க,அமைச்சின் மேலதிகச் செயலாளர் (தொழிநுட்பம்) எம். முங்கலிகா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல.எம்.என்.முபீன், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் பொறியியலாளர் ரஞ்சித் பாலசூரிய, தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.ஐ.ஏ.லத்தீப் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.