4-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 121 ரன்களில் சுருட்டியது இந்தியா!

Umesh Yadav
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி ரகானேவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 334 ரன்கள் சேர்த்தது. இந்திய மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்த ரகானே 127 ரன்கள் விளாசினார். அஸ்வின் 56 ரன்கள் சேர்த்தார். தவான் 33 ரன்களும், கோலி 44 ரன்களும் எடுத்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். குறிப்பாக ஜடேஜாவின் பந்துவீச்சில் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 42 ரன்கள் சேர்த்தார். பவுமா 22 ரன்களும், எல்கர் 17 ரன்களும், விலாஸ் 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர். 

இந்தியா தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து இந்தியா 213 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்குகிறது.