ஜனாதிபதி அவர்கள் அதிகமான நிதியினை கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளார் – ஹிஸ்புல்லாஹ்

ஜவ்பர்கான் –

 

கடந்த பத்தாண்டுகளில் ஒதுக்கப்படாத நிதியை அடுத்த 2016ம் ஆண்டில் கல்விக்காக ,இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் அதிகமான நிதியினை கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். ஆண் மாணவர்களை விட பெண் மாணவிகளே கல்வியில் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர். 60 வீத மாணவிகள் பல்கலைக்கழகததிற்கு செல்கின்றனர் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு ,ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

DSCN3978

 

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப்பாடசாலையின் 85வது வருட ஆண்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.அதில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

பாடசாலையின் அதிபர் எம்.எம்.முபாறக் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற இவ் வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய ,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆண் மாணவர்கள் கல்வியில் ஆர்வங்காட்டுவது குறைந்து மாணவிகளே கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இலங்கையில் 60 வீதமான மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றனர். நிர்வாகம், மருத்துவம் என பலதுறைக்கும் பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றனர். ,இது ஆண்கள் கல்வியில் முன்னேற்றமின்மையைக் காட்டுகின்றது.என்றார்.
கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.