ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அமெரிக்க சிறப்புப் படை ஒன்று ஈராக்கிற்கு அனுப்பி வைப்பு : அஷ்டன் காட்டர் !

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க அமெரிக்க சிறப்புப் படை ஒன்று ஈராக்கிற்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அஷ்டன் காட்டர் அறிவித்துள்ளார்.

3933

“ஈராக் மற்றும் குர்திஷ் படையினருக்கு உதவ ஈராக் அரசுடன் முழுமையான ஒருங்கிணைப்போடு இலக்குகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தும் சிறப்புப் படையினரை அங்கு நிறுத்தவுள்ளோம்” என்று காட்டர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்புப் படையினர் சுற்றவளைப்புகள், பிணைக்கைதிகளை விடுவிப்பது மற்றும் ஐ.எஸ். தலைவர்களை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த படையினர் சிரியாவிலும் எழுத்துபூர்வமற்ற போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று காட்டர் சுட்டிக்காட்டினார். கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.எஸ். குழு சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான நிலங்களை கைப்பற்றியுள்ளது.

இந்த இரு நாடுகளிலும் 65 நாடுகள் உள்ளடங்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஒன்று ஐ.எஸ்ஸை இலக்கு வைத்து வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வொஷிங்டனில் செவ்வாயன்று பிரதிநிதிகள் அவையின் இராணுவ குழு முன் உரையாற்றும்போதே காட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.