றியாஸ் ஆதம்
கிழக்கு மாகாண முஸ்லீம்கள் தங்களுக்கென்றொரு சரியான அரசியல் தலைமையினை உருவாக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட இலுக்குச்சேனை அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு (2015.11.30) நேற்று முன்தினம் பாடசாலை அதிபர் ஏ. ஹாறுடீன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களின் ஆதரவினைப்பெற்று இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் என மார்தட்டிக்கொள்வோர் அம்மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்தில் சிறிதளவேனும் அக்கரை செலுத்தவில்லை ஆனால் அவர்கள் தங்களுக்கென பெறுமதியான அமைச்சுக்களையும், பதவிகளையும் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்களே தவிர இன்னும் எமது சமூகத்தின் தேவைகளை பற்றி சிந்தித்த வரலாறுகள் கிடையாது இதனை கிழக்கில் வாழுகின்ற கல்விமான்களும், புத்திஜீவிகளும் நன்கு உனர்ந்திருக்கின்றார்கள்.
நாட்டிலே அமையப்பெற்றுள்ள நல்லாட்சியில் எமது முஸ்லீம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் எமது சமூகத்திற்காக எதனைப பெற்றுக்கொடுத்தார்கள் என்று பார்க்கின்றபோது ஒனறுமேயில்லை இன்று இம்மாகாணத்திலே பல பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக கல்வி தொடர்பான பிரச்சினைகளைப் பார்க்கின்ற போது பின்தங்கிய பிரNதுசத்திலுள்ள ஏழை மக்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதனையிட்டு மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய கல்வி விடயத்தில் எமது தலைமைகள் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.
இருந்தாலும் பின்தங்கிய இலுக்குச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை; பல அடிப்படை தேவைகளுடன் இயங்கி வருகின்றது. இங்கு வாழ்கின்ற மக்களில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர.; எனவே இங்கு கல்விகற்கின்ற மாணவர்களாகிய நீங்கள் வறுமையின் காரணமாக கல்வியை விட்டு தூரமாய்விடக்கூடாது. வரலாறுகளைப் புரட்டிப்பார்க்கின்ற போது ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்களே கல்வித்துறையில் சாதனையாளர்களாகவும், உயரதிகாரிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும், புத்திசாலிகளாகவும் சிறந்து விளங்குகின்றனர். எனவே பெற்றோர்களாகிய நீங்கள் தங்களது பிள்ளைகளினதும் பாடசாலையினதும் தேவைகளை வளங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
நான் எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் ஏழைகளின் கல்விக்கு உதவும் நோக்குடனே எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் தளபாடங்களை வழங்கியுள்ளேன். ஏதிர்காலத்திலும் எனது நிதியினூடாக இப்பாடசாலைக்கு தேவையான உதவிகளை செய்து தருவேன் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹ்துல் நஜிம், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ. செயினுதீன், மற்றும் கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் என பலரும் கலந்துகொண்டனர்.