ஹாசிப் யாஸீன்
ஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையேயான சந்திப்பு இன்று (27) வெள்ளிக்கிழமைவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கான திட்ட நிபுணர் றிப்தி மொஹமட் மற்றும்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எச்.எம்.அப்துல் ஹையும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,
நாட்டின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு ஜேர்மன் நாட்டின் உதவியினை பெற்றுக்கொள்வதுசம்பந்தமாக ஆராய்ந்ததுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன்நாட்டுக்கான விஜயத்தின் போது விளையாட்டுத்துறை அபிவிருத்தி சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகைச்சாட்டிடுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
வட கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு வீரர்களுக்குஜேர்மன் நாட்டு பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சியளித்தல் சம்பந்தமாகவும்கலந்துரையாடப்பட்டது.
சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவி, இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குவதல் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேன்பாடுசம்பந்தமாகவும் பிரதி அமைச்சரினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அதற்கான நிதிகளைபெற்றுத்தருமாறு ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோளினையும் முன்வைத்தார். இதனைஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் செய்துதருவதாக இதன்போதுபிரதி அமைச்சரிடம் உறுதியளித்தார்.