விமான போக்குவரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியா : 2026-ல் உலக அளவில் 3-வது இடத்தை பிடிக்கும் !

வரும் 2026-ம் ஆண்டிற்குள் விமான போக்குவரத்தில் உலக அளவில் 3-வது இடத்தை இந்தியா பிடிக்கும் என சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐ.ஏ.டி.ஏ.) தகவல் வெளியிட்டுள்ளது. 

2014-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது ஆண்டுதோறும் 3.8 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் விமான போக்குவரத்து துறை வளர்ச்சியடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை தொடர்ந்து விமான போக்குவரத்து துறையில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

150914-airindia

விமான போக்குவரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல் ஒன்றினை ஐ.ஏ.டி.ஏ வெளியிட்டுள்ளது. இந்த விவரம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் புதிய பயணிகளின் அடிப்படையில் 2016-ம் ஆண்டிற்குள் இந்த வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முக்கியமாக அதிவேகமாக வளர்ந்து இந்திய விமான போக்குவரத்து 275 புதிதாக விமான பயணிகளுடன் 3-வது இடத்தை பிடிக்கும் என்றும் ஐ.ஏ.டி.ஏ தெரிவித்துள்ளது.

இதில், தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை சீனா விஞ்சிவிடும். அதாவது 758 மில்லியன் புதிய பயணிகளுடன் முதலிடத்தில் இருக்கும். அதேபோல் 523 புதிய பயணிகளுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும். 5-வது இடத்தை இந்தோனேசியா பிடிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.