அஷ்ரப் ஏ சமத்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணரும், கிழக்கு மாகாண சபை உறுப்பிணரும், பயங்கரவாத காலத்தில் காலம் சென்ற ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவினால் .இந்தியா தேசத்தில் பயங்கரவாத பிரச்சினைகளை கண்காணிக்கும் அதிகாரியாகவும் மற்றும் பாதுகாப்பு இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தாா். பொத்துவிலைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகா் அப்துல் மஜீத்.
கைத்தொழில் வாத்தக அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அவா்களின் சிபாா்சின் பேரில் கணிய வளங்களை ஏற்றுமதி செய்யும் மற்றும் நாட்டில் உள்ள சகல நிலத்தின் கீழ் உள்ள கணிய வளங்களை அகழ்வு செய்யும் நிறுவணங்களுக்காக Graphite Lanka நிறுவனம் இயங்கி வருகின்றது. இந் நிறுவனத்தின் பணிப்பாளார் நாயகமாக அண்மையில் மஜித் நியமிக்கப்பட்டாா்.
இந் நிறுவனம் நாரேகேன் பிட்டியில் உள்ள கொழும்பு கச்சேரிக்கருகில் உள்ளது. திங்கற் கிழமை(23) ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மஜித் தமது கடமைகளை பொறுப்பேக்க உள்ளாா் இந் நிகழ்வில் அமைச்சா்் றிசாத் பதியுத்தீன் மற்றும் பிரதியமைச்சா் அமீா் அலி கட்சி உறுப்பிணா்களும் கலந்து கொள்ள உள்ளனா்.