பாரிசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு !

 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி இரவு தீவிரவாதிகள் ஹோட்டல், கேளிக்கை விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். 

images
அதில், 129 பேர் பலியாகியதோடு, 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஈவு இரக்க மற்ற இத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. 

தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் பிரான்ஸ் பொலிசார் தாக்குதல் நடத்தி அதில், ஈடுபட்ட 8 பேரை சுட்டுக் கொன்றனர். அவர்கள் குறித்த அடையாளம் தெரிந்தது. இவர்கள் அகதிகள் போர்வையில் கிரீஸ் வழியாக பிரான்சுக்குள் ஊடுருவியது கண்டறியப்பட்டது. 

எனவே, கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தவிர எஞ்சியவர்களை தேடும் பணியில் பிரான்ஸ் பொலிசார் தீவிரமாக உள்ளனர். பாரீசில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வீடுகளில் பொலிசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவர்கள் மீது பொலிசார் திருப்பி சுட்டனர். அதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் பாரீசில் மீண்டும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.