ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பலி!

லிபி­யா­வி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் தலை­வரை இலக்கு வைத்து அமெ­ரிக்கா நடத்­திய தாக்­கு­தலில் அந்தத் தீவி­ர­வாத குழு தலைவர் இறந்து விட்­ட­தாக அமெ­ரிக்கப் பாது­காப்பு அமைப்­பான பென்­டகன் சனிக்­கி­ழமை தெரி­வித்­தது.


மிகவும் தேடப்­படும் ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­ன­ரான ஜிஹாதி ஜோனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களைத் தொடர்ந்தே மேற்­படி தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
லிபி­யாவில் அமெ­ரிக்கா நடத்­திய வான் தாக்­கு­தலில் நீண்ட கால அல்–­கொய்தா செயற்­பாட்­டா­ளரும் ஈராக்­கிய பிர­ஜை­யு­மான விஸ்ஸம் நஜ்ம் அப்ட் ஸாயத் அல் ஸுபேய்டி என அறி­யப்­படும் அபு நாபில் மர­ண­ம­டைந்­துள்­ள­தாக பென்­டகன் தெரி­விக்­கி­றது.
டெர்னா நக­ரி­லுள்ள தீவி­ர­வா­தி­களின் வளாகம் ஒன்றை இலக்கு வைத்து கடந்த வெள்ளிக்­கி­ழமை இந்தத் தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது.

இந்தத் தாக்குதலில் ஸுபேய்டி கொல் லப்பட்டுள்ளது உறுதி என பென்டகன் குறிப்பிட்டுள்ளது.