வடக்கு கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் சம்மந்தமான விடயங்கள் தொடர்பாக இன்று மதியம் 2மணிக்கு ஜனாதிபதி தலைமையில்நடைபெறவுள்
கடந்த 25 வருடகாலமாக அகதிகளாக வாழ்ந்தவரும் வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது சம்மதமான தீர்வுகளை பெற ஜனாதிபதி முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் மாண்புமிகு கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரஊப்ஹக்கீம் அவர்ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கிழக்குமாகாண முதலாமைச்சருமான கௌரவ அல் ஹாபிஸ் நசீர் அஹ்மட் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
25 வருடகாலமாக அகதிகலாக வாழ்ந்து வரும் வடமாகாண முஸ்லிம்களை வைத்து அரசியல் லாபம் தேடிவந்த அரசியல் வாதிகளுக்கு மத்தியில் இதய சுத்தியோடு வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்ற போராடி வந்தவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரஊப்ஹக்கீம் அவர்கள்.
அண்மையில் வடமாகாண முஸ்லிம் கள் மீள்குடியேற்றம் சம்மந்தமாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் வட்டமேசை என்னும் தொனியில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வாந்தது.
அத்தோடு,முஸ்லிம் காங்கிரஸின் 26 பேராளர் மாட்டிலும் இந்த நல்லாட்சியில் வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது.
அத்தோடு பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் வடபுல முஸ்லிம் களின் மீள்குடியேற்றத்துக்காக குரல் கொடுத்து வந்தவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரஊப்ஹக்கீம் அவர்கள்.
அல்லாஹ்வின் உதவியோடு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் போராட்டத்துக்கும் அவரின் குரலுக்கும் அரசாங்கம் செவிசாய்த்து இந்த அழைப்பை விடுத்துள்ளது.
இச்சந்திப்பின் மூலம் வடபுல முஸ்லிம் மக்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்க வல்ல இறைவன் அல்லாஹ்வை பிராத்திப்போம்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரஊப்ஹக்கீம் அவர்களுக்காகவும் நீண்ட ஆயுள் வேண்டியும் தலைவரின் உரிமை போராட்டம் வெற்றி அடையையும் அல்லாஹ்வை பிராத்திப்போம்
மருதூர் FARAH