கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீனுக்கு கலை , இலக்கிய , ஊடகத்துறைக்கான வித்தகர் விருது வழங்கி கௌரவிப்பு !

IMG_4441_Fotor

 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழா 2015ல் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் (முஹம்மட் இஸ்மாயில்) கலை இலக்கிய ஊடகத்துறைக்கான வித்தகர் விருதினை பெற்றுள்ளார்.

 
திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் (08.11.2015) ஞாயிறு மாலை மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டத்துறை அமைச்சர் சீ.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதிகளாக விவசாய அமைச்சர் கீ.துரைராசசிங்கம், சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்,கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.டி.எம்.எஸ்.அசங்க அபேவர்தன பண்பட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை வழங்கி வைத்தனர்.

IMG_4443_Fotor

ஆல்ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸடீன் கலை இலக்கிய ஊடகத்துறை வரலாற்றில் 40வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். கடந்த காலங்களில்; செய்திச் சிமிழ், இரத்தின தீபம், வாழும் போதே வாழ்த்துவோம், உயர்ந்த மண்ணின் உன்னத விருது உட்பட மாவட்ட ரீதியில் பல விருதுகளை பெற்றுள்ளார். அத்துடன் 2009ஆம் ஆண்டு தேசிய ரீதியில் கலாசார அமைச்சினால் ஊடகத்துறைக்கான கலாபூஷணம் விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_4444_Fotor
ஊடகத்துறையில் உள்நாட்டில் அரச தனியார் அச்சு இலத்திரனியல் நிறுவனங்களில் பணியாற்றுவதுடன் வெளிநாட்டு செய்திச் சேவை நிறுவனங்களான ராய்ட்டர் செய்திச் சேவை லண்டன் தீபம் என்பவற்றுக்கும் செய்திகளை வழங்குபவராகவும் இருந்து வருகின்றார்.
ஊடகத்துறையில் மர்ஹூம் எச்.எம்.பீ..மொஹடீன் இவரது ஆசான் ஆவார்.

IMG_4445_Fotor

இவரது ஊடகத் துறை வாழ்வில் ஒரே கட்சியைச் சேர்ந்த மூன்று படிநிலை பதவிகளை வகித்தவர்களுக்கு இவர் ஊடகப் பணியாளராக பணிபுரிந்தார் .

அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.அஷ்ரப் அவர்களின் ஊடக இணைப்பதிகாரியாக சுமார் 5 வருடங்கள் மரணிக்கும் வரை அவருடன் செயற்பட்டுள்ளர்.

IMG_4516_Fotor
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளராகவும் அமைச்சராகவும் இருந்த எ.எல்.எம் அதா உல்லாவின் சிரேஷ்ட ஊடக இணைப்பதிகாரியாகவும் , மேலும் 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி .ஹசன் அலி அவர்களின் அமைச்சுக்கான ஊடகச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

IMG_4522_Fotor

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரான இவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று முழு நேர ஊடகப்பணியில் ஈடுபட்டு வருகின்றார் மேலும் இவர் ஊடகத்துறை டிப்ளோமா , பட்டமேற்கல்வி டிப்ளோமதாரியும் ஆவார். அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மர்ஹூம்களான மீராசாஹிபு அவ்வாக்குட்டி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரராவார்.