தமிழ் அர­சியல் கைதி­களில் பொது­மன்­னிப்­ப­ளிப்போர் குறித்து விரைவில் தீர்க்­க­மான முடி­வொன்று அறி­விக்­கப்­ப­டும் !

 

தமிழ் அர­சியல் கைதி­களில் பொது­மன்­னிப்­ப­ளிப்போர் குறித்து விரைவில் தீர்க்­க­மான முடி­வொன்று அறி­விக்­கப்­ப­டு­மென ஜனா திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரி டம் தெரி­வித்­துள்ளார்.


தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று நடை­பெற்­றது. இதன்­போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற் ­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக நாம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ருடன் இன்று (நேற்று) சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்தோம்.

தற்­போது 214தமிழ் அர­சியல் கைதிகள் நாட்­டி­லுள்ள சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 32பேர் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை விடு­தலை செய்­யப்­ப­ட­வுள்­ளனர். எஞ்­சி­யோரில் 30பேர் எதிர்­வரும் 20ஆம் திக­திக்கு முன்­ன­தாக விடு­தலை செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இவ்­வி­டயம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான சந்­திப்பின் போது இணக்கம் எட்­டப்­பட்­டுள்­ளது.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளோரில் 48பேர் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளனர். எஞ்­சி­யோரின் விடு­தலை தொடர்­பாக நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு தனியே சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்பால் அமைச்­ச­ரவை குழு­வொன்றை நிய­மிப்­ப­தாக இணக்கம் காணப்­பட்­டது. இந்­நி­லை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்பு இடம்­பெற்­றது. அவ­ரு­ட­னான சந்­திப்­பின்­போது கைதி­களின் விடு­தலை மற்றும் பொது­மன்­னிப்பு தொடர்­பாக அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள்இ எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து எடுத்­து­ரைத்தோம்.

அதன்­போது கருத்து வௌியிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடு­தலை செய்­யப்­ப­டுவோர் மற்றும் குற்றம் சாட்­டப்­பட்டோர் தவிர்ந்த ஏனோரின் விடு­தலை தொடர்­பாக நட­வ­டிக்­கைளை எடுப்­ப­தா­கவும் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்­வ­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைகலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.