ஜனாதிபதியால் இலங்கைக்கான நான்கு புதிய தூதுவர்கள் நியமனம் !

12189744_10153626433431327_5282921691514946640_n

 நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு தாய்லாந்து பிரதமரின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்

இதேவேளை, இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் இன்று தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்.

இதற்கமைய, இலங்கைக்கான தென் சூடான் தூதுவராக கலாநிதி டானியல் பீட்டர் ஒத்தோலும். கஸகஸ்தான் தூதுவராக புல்லாட் செர்பென்பயெவ்வும், செர்பிய தூதுவராக விளாடிமிர் மரிக் மற்றும் குவைத் தூதுவராக கலாஃப் பூ தாயிர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.