கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக இறக்காமம் ஜெமில் காரியப்பர்!

 

அபு அலா –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் இணைப்புச் செயலாளராக இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் நியமிக்கப்படவுள்ளார்.

2_Fotor

மத்திய குழுவின் செயலாளர் யூ.எல்.எம்.ஜப்ரி தலைமையில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இறக்காமம் மத்திய குழுவினருக்கும் இடையில் விஷேட சந்திப்போன்று நேற்றிரவு (03) இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பரை நியமிக்க மத்திய குழுவினர் ஏகமானதாக அங்கிகரித்துக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே இவர் நியமிக்கப்படவுள்ளமையும், அதனால் குறிப்பிட்ட நபரை தனது இணைப்புச் செயலாளராக நியமிப்பேன் எனவும் உறுதிமொழியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.