மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க நடவடிக்கை!

மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

Unknown

கொழும்பில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 15வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

மேலும் 2015ம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 516 பில்லியன் இலக்கு வழக்கப்பட்டதாகவும், அவர்கள் அதனைவிட 88ஐ அதிகமாக பெற்று 602 பில்லியன் என்ற இலக்கை எட்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறினார். 

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தை வெற்றிக் கொள்ள 80 வீதமான ஒத்துழைப்புக்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களமே வழங்கும் என தெரிவித்த அவர், நாட்டிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து வரிப் பணங்களைப் பெற்று அதனை வெற்றி கொள்ள கைகொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

செல்வந்தர்கள் பலர் வரிப் பணம் செலுத்தாது மறைந்துள்ளதாகவும் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.