முஸ்லிம் அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது !

 

எஸ்.அஷ்ரப்கான்

 

இலங்கையில் அபிவிருத்திகள் நடைபெறுகிறதோ இல்லையோ ஒரு தேர்தல் முடிந்த கையோடு மற்றோரு தேர்தல் என தொடர்ந்தும்  தேர்தல் தேர்தல் களமாகவே இலங்கை திருநாட்டின் வாழ்நாள் தொடர்ந்தும் நகர்ந்து கொண்டிருக்கின்றதுஇதற்கிடையில் ஜனநாயக ரீதியில் வாக்குரிமையை பயன்படுத்தும் மக்கள் தாம் அரசியல் அங்கீகாரம் வழங்கிய அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் விடயங்களை செய்யாமல் சிலவேளை அரசியல் அதிகாரம் பறி போகும் நிலையில் நாட்டு மக்களின் நிலை அந்தோ பரிதாபம்இதனை பயன்படுத்தி அரசியல்வாதிகள் மீண்டும் அதிகாரம் பெற பொய் வாக்குறுதிகளுடன் மக்களுக்கு முன் தோன்றுவார்கள்இது இலங்கை அரசியலில் தொடர்கதையாகவே இருக்கும்

 

இலங்கை நாட்டில் குறுகிய கால இடைவெளியினுள் இரு தேர்தல்கள் நடை பெற்று முடிந்துவிட்டன. இன்னும் மிகக் குறுகிய காலப்பகுதியினுள் மூன்றாவது தேர்தல் நடைபெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது முன்னைய வாக்குறுதிகளை பற்றி பேச அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் நேரமில்லைஅடுத்த தேர்தல் வியூகம் அமைக்கும் பணியில் தற்போது களத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபடத் தோடங்கியுள்ளன. தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை நோக்கி கட்சிகள் தங்கள் காய் நகர்த்தல்களினை ஆரம்பித்துள்ளன. கடந்த இரு தேர்தர்லில் ஒன்றிணைந்து செயற்பட்ட மைத்திரி,ரணில் அணியினர் இம் முறை பிரிந்து செயற்படுவது தான் இத் தேர்தலின் குறிப்பிடத்தக்க விடயமாக நோக்கப்படுகிறது.

 

rauff atha rizad 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களால் தனித்து மஹிந்தவினை வெற்றி கொள்ள முடியாது என்பதனை ஐ.தே.க நன்குஅறிந்த நிலையிலேயே களமிறங்கியதை நாம் கண்டோம்.

 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் கட்சிகளுக்கு வழங்கிய அதே ஆதரவினை எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் எதிர்பார்க்கலாம். என்றாலும் மஹிந்த ராஜ பக்ஸ தனித் தரப்பாக களமிறங்கி சு.க இரண்டு துண்டுகளாக பிளவு படும் என்ற கருத்தும் ஓங்கி வருகிறது.

 

கடந்த கால நடப்பு சான்றுகளை வைத்து இக் காலத்தில் அரசுக்கு அழுத்தம் வழங்க முடியாத ஒரு விடயத்தில் மஹிந்த வெளிப்படையாகவோ அல்லது இரகசியமாகவோ செயற்பட துணியமாட்டார்ஏற்கனவே இவர் மூக்குடைபட்டுள்ளார்.

 

மஹிந்த அரசின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவே முஸ்லிம்கள் ஐ.தே.கவின் பக்கம் சார்ந்தார்கள். என்றாலும் இன்றைய கள நிலவரங்களின்படி ரணில் அரசின் மீதும் முஸ்லிம்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்துள்ளது என்றே கூறவேண்டும்மைத்திரி அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லிம் பகுதிகளில் களமிறங்கினால் முஸ்லிம்களின் குறித்தளவு வாக்கினைப் பெற்றுக் கொள்ள முடியும். மஹிந்த உருவாக்கி வைத்துள்ள பல முஸ்லிம் பிரபலங்கள் தற்போது தங்கள் முகவரியினை தொலைத்து நிற்கின்றனர். இவ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இவர்களில் சிலவேளை சிலரின்  அரசியலுக்கு மைத்திரியின் ஆதரவு மூலம் பலம் கிடைக்கும் நிலை காணப்படுகிறது

 

கடந்த பிரதேச சபைத் தேர்தலினை நோக்கும்போதுமு.கா கடந்த பிரதேச சபைத் தேர்தலில் அம்பாறைமட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் சு.கவுடனும் இணைந்தும் போட்டியிட்டிருந்தது.அம்பாறை மாவட்டத்தில் மு.கா ஐந்து முஸ்லிம் சபைகளினை(இறக்காமம்,பொத்துவில்,நிந்தவூர்,அட்டாளைச்சேனை,கல்முனை) கைப்பற்றியது.

 

இம் முறை அம்பாறையில் மு.கா தான் முன்னர் தக்க வைத்துக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களினை தக்க வைத்துக் கொள்ள ஏதுவான ஒரு சூழ் நிலை தோற்றம் பெற்றுள்ளது. அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் மு.காவில் இணையக் கூடிய ஒரு சைகையினையும் காட்டியுள்ளார். அதாவுல்லாஹ் மு.காவில் இணைந்தால் சம்மாந்துறை,அக்கரைப்பற்று இரு சபைகளினையும் மிக இலகுவாக மு.கா தன் வசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு மு.கா விற்கு இந்த உள்ளுராட்சி தேர்தல்களம் மிகவும் சாதகமான நிலையையே தோற்றுவித்துள்ளது.

 

தற்போதைய நிலையில் மு.காஸ்திரமாக இருப்பதனால் பொடுபோக்காகவும் முழு முஸ்லிம் பிரதேசங்களிலும் தேர்தலில் வியகம் அமைக்க முடியாது காரணம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது முதலாவது பயணத்திலேயே அம்பாரை மாவட்டத்தில் ஸ்திரமாக தனது காலை வைத்துள்ளதுதற்போது வேட்பாளர்களுக்கு மு.கா காலை வாரினால் அதனை ஓரளவு சமாளிக்கும் அளவு அ.இ.ம.கா உருவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் குறிப்பாக திருகோணமலைவன்னிபுத்தளம் மாவட்டங்களில் மு.காவினை விட அ.இ.ம.கா பலமிக்கதாக உள்ளதுஇந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது தனது பலத்தினை பிரயோகிக்கும் அதேவேளை அ...காகட்சியின் சூறாவழிக்கு தாக்குப் பிடிக்கும் மனோதிடத்தையும்பாதுகாப்பையும் இங்கு செய்ய வேண்டும்.

 

மறுபுறம் அ...காவின் உட்கட்சிப் பூசல் விவகாரமும் இச்சந்தர்ப்பத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அ.இ.ம.கா.கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கடந்த பொதுத் தேர்தலின் பின்பு கட்சிக்கும் கட்சிக்கார்ர்களுக்கும், தலைமைக்கும் வேண்டப்படாத ஒருவராக மாறி தற்போது அவரை கட்சி ஒதுக்கி வைத்துள்ளதாக தற்காலிகமாக நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அவரது இடத்திற்கு வேறொருவரை கட்சித்தலைமை நியமித்துள்ளதாக அன்மையில் அறிவித்தது. கட்சியுடன் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை உள்ளடக்கிய  புதிய குலாம் ஒன்றும் இணைந்து இந்நடவடிக்கையில் இறங்கியது. ஆனால் அது சட்டப்படியானதல்ல என்றும், அதற்கான எவ்வித எழுத்து மூல அறிவித்தல்களோ நடவடிக்கையோ செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்படாத நிலையில் வை.எல்.எஸ். ஹமீடே தற்போதும் கட்சிக்கு  செயலாளர் நாயகமாக இருக்கம் நிலையில் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களின் வேட்பமனுவில் கட்சி சார்பாக கட்சி செயலாளரே கையொப்பமிட வேண்டும். அந்த அதிகாரம் நாம் அறிந்தவரை தற்போதம் வை.எல்.எஸ். ஹமீட் இடமே இருக்கின்றது.  இந்நிலையில் இப்போதுள்ள தலைமை அமைச்சர் றிஷாடுக்கும், செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடுக்கும் இடையில் இருக்கும் விரிசலில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இக்கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்படலாம் என்று ஊகம் வெளியிடப்படுகின்றது. இதனை மு.கா. சிறப்பாக பயன்படுத்தும் தருவாயில் சென்ற தேர்தலில் அ.இ.ம.கா. விற்கு கிடைத்த  வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை காணப்படுகின்றது. பல்வேறு தந்திரோபாயங்களுடன் இருக்கும் மு.கா. தலைமை இதனை சிறப்பாக பயன்படுத்தும் என்பதுடன் தமது கட்சிக்கான அம்பாரை மாவட்ட வீழ்ச்சிக்கு வழிவகுக்காமல் அ.இ.ம.கா. தலைமை செயற்படுமா ? என்ற கேள்வியும் இருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம் அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்-

நன்றி சுடர் ஒளி

 my best photo