சாய்ந்தமருதில் இளைஞர் காங்கிரசின் மகாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் பலதுறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.
சாய்ந்தமருதில் நடைபெறும் இந்த மகாநாட்டுக்கும் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் ஏதாவது சம்பந்தமோ, தொடர்போ உள்ளதா? அல்லது திட்டமிட்டு முக்கியமானவர்களை அழைக்கவில்லையா? அல்லது அழைப்பு விடுத்திருந்தும் சாய்ந்தமருதில் இருக்கின்ற சில குள்ள நரிக்கூட்டம் அதனை இருட்டடிப்பு செய்துள்ளார்களா?
இளைஞர் காங்கிரஸ் மகாநாடு என்றால் எந்த இளைஞர்களுக்கு மகாநாடு? இளைஞர்கள் என்பவர்கள் யார்? இதன் தேசிய அமைப்பாளர் இளைஞசர் என்ற வரையறைக்குள் அடங்குகின்றாரா என்றெல்லாம் கேட்கத்தோன்றுகின்றது.
இவ்வாறான மகாநாடுகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை அழைக்காமல் புறக்கணித்துவிட்டு தங்களுக்கு வாசியானவர்களை மட்டும் அழைத்து மகாநாடு நடத்துவதன் மூலம் எதனை சாதிக்க நினைக்கின்றார்கள்? அத்துடன் துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்குவதென்றால் அவர்கள் என்ன அடிப்படையில், எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள்?
இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் அன்மையில் தான் முஸ்லிம் காங்கிரசில் இணைந்தவர். அத்தோடு அரசியலுக்கும் புதியவர். எனவே அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் யார் என்றும், இந்த கட்சியை இக்கட்டான சூழ்நிலைகளில் போராடி காத்தவர்கள் யார் என்றும் தெரிந்திரிக்க வாய்ப்பில்லை. மேலும் இம்மாநாடு சம்பந்தமான ஊடக மாகாநாட்டில்கூட மு.கா. முக்கியஸ்தர்கள் யாருமின்றி இவரே நடத்தியதனையும் அவதானிக்ககூடியதாக இருந்தது.
புதிதாக கட்சிக்குள் வந்தால் பழையவர்களை அணுகி அவர்களது ஆலோசனைகளையும் பெற்று மகாநாடு நடத்துவதுதான் நடைமுறை. இதனால் ஒன்றும் குறைந்து விடப்போவதுமில்லை. ஆனால் முக்கியமான போராளிகளை அழைக்காமல் மகாநாடு நடத்துவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினதும், முக்கியஸ்தர்களினதும் எதிர்ப்புக்களை ஆரிப் சம்சுதீன் அவர்கள் எதிர்கொண்டுள்ளார். இது எதிர்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேசிய ரீதியில் சாய்ந்தமருதில் இளைஞர் காங்கிரஸ் மகாநாடு என்று பிரச்சாரம் செய்யும்போது சாய்ந்தமருதில் உள்ளவர்களின் முழு பங்களிப்புடன்தான் நடாத்தப்படுகின்றது என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறை வேறு.
ஏனைய ஊர்களுடன் ஒப்பிடுகையில் சாய்ந்தமருதில்தான் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகமான வாக்குகள் அளிக்கப்படுகின்றது அதேநேரம் ஆகக்குறைந்த முக்கியஸ்தர்கள் உள்ள ஊராக சாய்ந்தமருது காணப்படுகின்றது.
சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசை வைத்து பிழைப்பு நடத்தும் சில குள்ளநரிக்கூட்டம் இருகின்றது. இவர்கள் எந்நேரமும் வாளை தீட்டிக்கொண்டே இருப்பார்கள். காலையில் எழும்பினால் முதலில் யாருக்கு வெட்டலாம், யாரின் கழுத்தை அறுக்கலாம் என்று சிந்திப்பதை தவிர வேறு எதுவும் இவர்களுக்கு தெரியாது. யாரையும் முன்னுக்கு வர விடமாட்டார்கள். அதனால்தான் குறைந்த முக்கியஸ்தர்கள் உள்ள ஊர் என்ற பெருமையை சாய்ந்தமருது பெற்றுள்ளது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
தம்பி சாய்ந்தமர்தான் ரோசம் இல்லாதவன்,