கூடி விளையாடு பாப்பா…!

unnamed

கூடி விளையாடு பாப்பா

ஆடும் புலியும் 

அலுக்காத சூட்டீனும்

 

ஓடிப் பிடித்தலும்

ஓ அம்மா விளையாட்டும்

 

கூடி விளையாடிய

குதூகல ஆட்டங்கள்

படிப்படியாய் மறைய

பல்வேறு காரணங்கள்.

 

ஓட இடமில்லை

உள்ள நிலத்திலெல்லாம்

மாடி வீடுகள்

மண்ணைக் காணவில்லை.

 

பிள்ளையின் விளையாட்டில்

Prestiges பார்க்கும் கூட்டம்

அடுத்த வீட்டு பிள்ளையுடன்

அண்ட விடவில்லை.

 

களிசன் போட பழகுமுன்னே

டியூசன் கிளாஸ் அனுப்புவதால்

பின்னேர விளையாட்டு

பிள்ளைக்குக் கிடைக்கவில்லை.

 

போணிலும் டெப்பிலும்

புடிச்ச game போட்டு

மூலையில் உட்கார்ந்து

மூழ்கிப் போகின்றார்.

 

நொண்டி விளயாட்டில்

நோய்கள் ஓடிப் போனது

Candy crush விளையாட்டால்

கண் வாடிப் போனது.

 

கிட்டிப் புள் விளையாட்டில்

கிடைத்தது ஆரோக்கியம்

Temple run விளையாட்டில்

டென்சன்தான் கூடியது.

 

சேர்ந்து விளையாடியதில்

சிநேகம் வளர்ந்தது

சோர்ந்து போகின்றார்

சோம்பேறி game களினால்

பிள்ளை விழ வேண்டும்

 

அழ வேண்டும் எழ வேண்டும்

பொத்திப் பொத்தி

பொந்தினுள் மாம்பழம் போல்

வளரும் பிள்ளைகள்

வாழ்க்கையில் பிரச்சினைகள்

வருகின்ற போது

வாடி விழுந்திடுவார்.

 

ஆதலால் பிள்ளைகள்

அடுத்த பிள்ளைகளுடன்

கூடி விளையாட

கொஞ்சம் இடம் கொடுப்போம்.

 

காத்தான்குடி நிஷவ்ஸ்