பைஷல் இஸமாயில் , சப்னி
கிழக்கு மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீர் இன்று திங்கட்கிழைமை (26) கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று மதியம் 2.30 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுணர் காரியாலயதில் இடம்பெற்ற பதவியேற்று நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் மற்றும் கல்வியமைச்சர் தண்டாயுதபானி வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி ஆகியோருடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதுடன் விஸேடமாக பின்தங்கிய மூவின மக்களுக்கும் சிறந்த சேவையாற்ற இவ்வமைச்சின் மூலம் நான் பயன்படுத்துவேன்.
நான் இன்று சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றதற்கு காரணமாக அமைந்த கட்சியின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீமுக்கும், முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கட்சியின் போராளிகளுக்கும் இந்த இடத்தில் நன்றி தெரிவிக்கும் இதேவேளை எல்லாவற்றுக்கும் மேலாக என்னைப் படைத்த அல்லாஹ்வுக்கு எல்லாம் உரித்தாகும் என்றார்.