பலஸ்’தீ’ன் எரிகிறது …!

பலஸ்‘தீ’ன் எரிகிறது 
+++++++++++++++++

காஸா எரிகிறது
எங்கள்
காசால் எரிகிறது.
கூசாமல் குடிக்கும்
கோலா கொடுக்கின்ற
காசால் எரிகிறது காஸா.

பலஸ்தீன உயிர்கள்
பரிதாபமாக
பாதையில் மரணம்.
அரபுத் தலைகள்
அமெரிக்காவின்
போதையில் சரணம்.

முதலாம் கிப்லாவை
மூண்றாம் தலத்தை
மூட விடலாமா?
சுரங்கம் தோண்டி
இறங்கச் செய்வதை
சும்மா விடலாமா?

சலாகுத்தீன் பரம்பரை
சைத்தானை விரட்டி
பைத்துல் அக்ஸாவை
ஜெயித்து மீட்பார்.
வைத்தும் காப்பார்.

எறிகின்ற கற்கள்
எரிகின்ற குண்டாய்
எதிரியைத் தாக்கும் -அதில்
தெரிகின்ற வீரம்
தருகின்ற பயத்தால்
கருகிடும் யூதம்.

வேதனை செய்யும்
யூதனை வென்று
சாதனை செய்வார்.
முடியாது போனால்
‘சா’ தனை அணைத்து
சத்திய வழியில் 
ஷஹீத் ஆவார்.

எங்கள் கடமை
இஸ்ரேலுக்கெதிராய்
இறையிடம் கேட்போம்.
இங்கே இருந்தே
எதிரிக்கெதிராய்
இயன்றதை செய்வோம்.

காத்தான்குடி நிஷவ்ஸ் 

Palestinian refugee women chant slogans and wave Palestinian flags during a rally supporting the Palestinian UN bid for observer state status, in front the United Nations headquarters in Beirut, Lebanon, Thursday Nov. 29, 2012. The Palestinians will request to upgrade their status on November 29. The status could add weight to Palestinian claims for a state in the West Bank, Gaza Strip and east Jerusalem, territories captured by Israel in the 1967 Mideast war from Jordan.. (AP Photo/Bilal Hussein)