இந்துக்களின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழா பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று காலை சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசுரிய மற்றும் பிரதம மந்திரி, மீள்குடியேற்ற ஹிந்து விவகார அமைச்சா் ரி.எம் சுவாமி நாதன் , சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் , பாராளுமன்ற பிரதிசெயலாளார் நாயகம் மற்றும் பாராளுமன்ற அலுவலர்கள் இந்து கலாச்சார திணைக்கள அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும், துர்க்கா தேவியை குறித்தும் அடுத்த மூன்று நாட்களும் லக்ஷ்மி தேவியை குறித்தும் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த விரதத்தின் கடைசி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
சமய வேறுபாடுகளை மறந்து, இந்நாட்டின் பல்வேறு இன, சமயத்தினரும், இவ்விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தனா்