சங்கக்கார திரிமான்னவின் சதங்களுடன் இலங்கை இலகுவான வெற்றி

 

இங்கிலாந்து அணிக்கெதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 9 விக்​கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

310 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 பந்துகள் மீதமிருக்க 312 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன 139 ஒட்டங்களையும் குமார் சங்க்கார 117  ஒட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

இன்றைய போட்டியில் 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதன் மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சதமடித்த இலங்கை அணியின் வயது குறைந்த வீரர் என்ற சாதனையை திரிமான்ன தன்வசப்படுத்தினார்.

இது ஒருநாள் கிரிக்கெட்டில்  லஹிரு திரிமான்ன  பெற்றுக்கொண்ட 4 ஆவது சதமாகும்.

அத்துடன் குமார் சங்கக்கார தனது 23 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டு இழப்பிற்கு 310 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 121  ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் சுரங்க லக்மால் , அஞ்சலோ மத்தியூஸ், டீ.எம்.டில்ஷான் , லசித் மாலிங்க , ரங்கன ஹேரத்   மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கட்டினை கைப்பற்றியுள்ளனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.