ஜெ .எம் .வஸீர்
நகரப்புறங்களில் காணப்படும் முதர்த்தர பாடசாலைகளில் தமது மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் முண்டியடித்துக்கொண்டு செயர்ப்படுவதனால் அப்பாடசாலைகளில் நெரிசல் தன்மையும் அப்பாடசாலைகளில் எல்லா மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள முடியாமைனால் பெற்றோர்கள் பெரும் ஏமாற்றமும் விரக்தியும் அடைகின்றனர் .
நகரப்புற பாடசாலைகளை போன்று கிராமப்புற பாடசாலைகளையும் தரமுயர்த்துதல் அவசியமாகும் .அதற்கமைவாக கிராமப்புற பாடசாலைகளை தரமுள்ள பாடசாலைகளாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சினால் இதற்க்கு முன்பு DSD ,நவோதய ,இசுரு ,1000 பாடசாலைகள் அபிவிருத்தி ,மகிந்தோதய என்று பல செயர்த்திட்டங்கள் கிராமப்புற பாடசாலைகளை நோக்கிச்சென்றாலும் அவை எதிர்பார்த்த குறிக்கோள்களையும் அடைவுகளையும் அடையவில்லை. அவைகளை நிபர்த்தி செய்யும் திட்டமாக “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை “என்ற புதிய தொனிப்பொருளில் கிராமப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இச்செயர்த்திட்டம் ஆரம்பிக்கபடவுள்ளது .இது கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் புதிய கல்வி செயற்ப்பாட்டு த்திட்டத்தின் ஒரு அம்சமாகும் .
இச்செயர்த்திட்டம் 2016 -2020 ஆண்டு காலப்பகுதிகளில் நடைபெறும் இதற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன் நாட்டில் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு பிரிவில் இரண்டு அல்லது மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்படும் .இதில் மாகான மற்றும் தேசிய பாடசாலைகளும் உள்ளடங்கும்.
நகரப்புறங்களில் காணப்படும் பிரபல்ய பாடசாலைகளில் காணப்படும் சமமான வசதிகள் அதாவது பௌதீக,மானிட ,உட்கட்டமைப்பு ,சிறந்த பயிற்ச்சியுள்ள ஆசிரியர்கள் போன்ற வசதிகளையும் இப்படசாளைகளுக்கும் வழங்குவதன் மூலம் அவைகளையும் நகரப்புற பிரபல்ய பாடசாலைகள் போன்று முழுமையான பாடசாலைகளாக மாற்றி நகர் புற பிரபல்ய பாடசாலைகளில் உள்ள வசதிகளை அருகில் உள்ள பாடசாளைகளுக்கும் வழங்கி நகரப்புற பிரபல்யமான பாடசாலைகளின் நெரிசலையும் போட்டித்தன்மையையும் குறைத்து. கிராமிய மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும் .
எனவே கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் இந்த நல்ல செயர்த்திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச்செல்ல நாட்டிலுள்ள அனைத்து கவிசார் அதிகாரிகளினதும் உதவியும் ஒத்தாசையும் மிக முக்கியமாகும் . இத்திட்டத்தை முன்கொண்டு செல்ல உழைக்க வேண்டும் .நாட்டில் கல்வித்துரையின் துயர் நீங்கி நல்லதொரு கல்வி யுகம் மலர வாழ்த்துக்கள் …