ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிக்கிடையே சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நேற்று சந்தித்துள்ளனர்.

சமகால அரசியல் நிலலைவரம் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சொயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி மற்றும் பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்தனர்.