ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் விருந்தாளியாகவே நடத்தப்பட்டார் : முன்னாள் மந்திரி அம்பலம் !

 

sniper12n-1-web 

அமெரிக்க ராணுவ படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் விருந்தினராகவே பதுங்கியிருந்தார் என்பதை அந்நாட்டு முன்னாள் மந்திரி அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயேயான உறவுகள் நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் நிலையில், தற்போது அந்நாட்டு முன்னாள் ராணுவ மந்திரி ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் விருந்தாளியாக இருந்ததை அம்பலப்படுத்தியுள்ளார். 

கடந்த 2001-ம் ஆண்டு செப் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையமான இரட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளானதையடுத்து, அந்த அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தேடி வந்தது. இந்நிலையில் 2011-ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் புறநகரில் பின்லாடன் பதுங்கியிருந்தை, அமெரிக்க ராணூவத்தின் சீல் படைகள் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்திற்கு முன்பாக, பின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது எங்களுக்கு தெரியாது என அந்நாட்டு அரசு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் யுசுப் ராஸா கிலானியின் அமைச்சரவையில் 2008 முதல் 2012 வரை ராணுவ மந்திரியாக இருந்த சவுத்ரி அகமது முக்தர், தற்போது கூறியிருப்பதாவது:-

பின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது அப்போதைய அரசுக்கு நன்றாக தெரியும். அவனை மறைவான இடத்தில் பதுங்கியிருக்குமாறு கூறி, விருந்தாளியாகவே நடத்தினோம். இது அப்போதைய பிரதமராக கிலானி, அதிபர் சர்தாரி, மற்றும் படைகளின் கூட்டுத் தலைவருக்கும் நன்றாகவே தெரியும். பின்லேடனுக்கு பாக் அரசு மட்டுமின்றி, உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் பாக் ராணுவம் ஆகியவையும் உதவின. அப்போதைய ராணுவ அமைச்சராக இருந்த நான் எந்த உதவியும் செய்யவில்லை. 

முன்னாள் மந்திரியின் இந்த பகீர் வாக்குமூலம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.